அரசுப்பள்ளிகளில் படித்த மாணவியர் உயர்கல்வி பயிலும் விகிதத்தினை அதிகரிக்கும் வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்படுள்ளது .இத்திட்டத்தின் கீழ் தொழில் நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் போன்ற இளநிலை கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கப்படும். இத்தொகை மாணவியின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.