அரசு கலை – அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை.. ஆன்லைன் விண்ணப்ப காலஅவகாசம் மே 24 வரை நீட்டிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் தேதி என்பது மே 24 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.